தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக பார்க்கப்படுபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தனது சினிமா பயணத்தை தொடர்ந்ததிலிருந்து டாப் ஹீரோக்களின் படங்களில் நடிப்பத்தால் இவரது மார்கெட் எப்பொழுதுமே உச்சத்தில் இருந்தது இருப்பினும் நிஜ வாழ்க்கையில் மட்டும் சில சர்ச்சைகளில் சிக்கி தவித்தார்.
இருப்பினும் அதிலிருந்தும் தன்னை மாற்றிக்கொள்ள ஒரு வழியாக நானும் ரௌடி தான் திரைப்படத்தின் போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தார். அதன் பிறகு இந்த ஜோடி ஏழு வருடங்கள் காதலித்து வந்த நிலையில் ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர் அதன் பிறகு நயன்தாராவுக்கு நல்ல ராசி டபுள் மடங்காக மாறியது..
ஆம் ஒரு பக்கம் வாழ்க்கையை என்ஜாய் பண்ண மறுப்பக்கம் சினிமா வாய்ப்புகளும் குவிந்து கொண்டு தான் இருக்கிறது தற்பொழுது நயன்தாரா கையில் கனெக்ட், கோல்ட், நயன்தாரா 75, ஜவான் போன்ற படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் அடுத்ததாக அஜித் 62 வது திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் கனெக்ட் திரைப்படம்..
வருகின்ற கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 22ஆம் தேதி கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது அண்மையில் இந்த படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து இழுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை எதிர்த்து நடிகர் விஷாலின் லத்தி சார்ஜ் திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகிறது.
இந்த படத்தில் விஷால் உடன் கைகோர்த்து சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் 5 மொழிகளில் வெளியாக்குவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது மேலும் கிளைமேக்ஸ் கட்சியில் மட்டுமே சுமார் 200க்கும் மேற்பட்ட ரவுடிகளை விஷால் அடிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது என்பது கூடுதல் தகவல் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் மோதுவதால் யார் கை ஓங்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றன..