மீண்டும் ரசிகர்களின் கண்களில் மாட்டிக்கொண்ட விஜய் சும்மா விடுவார்களா.! இணையத்தில் பட்டையை கிளப்பும் புகைப்படம் இதோ.!

0

ஜனநாயக கடமையை செய்ய வேண்டும் என்பதற்காக நேற்று மக்கள் மட்டுமல்லாமல் சினிமா துறையில் பணியாற்றி வந்த பல நடிகர்கள்,நடிகைகள் தனது வாக்கினை செலுத்துவதற்காக வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளார்கள் மேலும் அப்போது அவர்கள் எடுத்த புகைப்படத்தைக் கூட நான் வாக்களித்துவிட்டேன் என்று சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்கள்.

அந்த வகையில் அஜீத் வாக்குச்சாவடி திறப்பதற்கு முன்பே தனது மனைவியுடன் சென்று முதல் ஓட்டாக போட்ட புகைப்படம் கூட சமூக வலைதளங்களில் வைரலானது அதேபோல் விஜய் தனது வீட்டிலிருந்து சைக்கிளிலேயே வாக்கு செலுத்துவதற்காக வாக்குச் சாவடியை நோக்கி சென்ற போது அவரது ரசிகர்கள் கூட்டம் கூட்டமாய் அவரை சுற்றி பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

அதுமட்டுமல்லாமல் நேற்று திமுக கட்சியின் கலர் விஜய் ஓட்டி வந்த சைக்கிளில் இருந்ததால் ரசிகர்கள் பலரும் இவர் திமுக கட்சிக்குத்தான் ஓட்டு போட்டு வருகிறார் என ஒரு பரபரப்பைக் கிளப்பினார்கள்.

மேலும் விஜய்யின் வீடு வரை சென்ற ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து வந்தார்கள் இதனையடுத்து  விஜய் தற்போதும் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்கும் வகையாக அவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஆம் விஜய் வெளிநாடு செல்ல விமான நிலையத்திற்கு சென்றுள்ளார் அங்கு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது விஜயின் 65வது படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா செல்ல இருக்கிறார் என தகவல் கிடைத்தது இதனை வைத்து பார்த்த ரசிகர்கள் பலரும் இன்னும் ஒரு வாரத்தில் படம் தொடங்க இருப்பதால் விஜய் இப்பொழுதே கிளம்பி விட்டார் என கூறி வருகிறார்கள்.