தவமாய் தவமிருந்து படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா.? உண்மையை உடைத்த இயக்குனர்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சேரன். இவர் 2002- ஆம் ஆண்டு காதல் வைரஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், யுத்தம் செய், ராமன் தேடிய சீதை போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

பன்முகத்தன்மை கொண்ட சேரன் அவர்கள் இதற்கு முன்பாகவே இயக்குனராக தமிழ் சினிமாவில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 1997-ஆம் ஆண்டு பாரதி கண்ணம்மா என்ற திரைப்படத்தை முதலில் இயக்கினார் இதனைத் தொடர்ந்து அவர் தேசியகீதம், பொற்காலம், பொக்கிஷம், பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் போன்ற  படங்களை எடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை அழுத்தமாக பிடித்துக்கொண்டார் என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

சமீப காலமாக சினிமாவில் எந்த ஒரு துறையிலும் பணியாற்றாமல் இருந்தாலும் சேரன் மீது இருந்த ஈர்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் குறையாமல் இருக்கிறது. இந்நிலையில் பிரபல விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு தனது ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் வீட்டில் அமைதியாக தனது கருத்துக்களை கூறி ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இருப்பினும் டைட்டிலை வெற்றி பெறாதது சற்று வருத்தமாக இருந்தாலும் இதனை அடுத்து வெளிவந்த சேரன் அவர்கள் ராஜாவுக்கு செக் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார் .இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனை தொடர்ந்து அவர் தற்பொழுது விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை சில காரணங்களால் படம் தள்ளி போய் வருகிறது என கூறியுள்ளார். இந்நிலையில் ரசிகர்களுடன் உரையாடிய சேரன் அவர்கள் ரசிகர்களிடம் கூறியது. விஜய் சேதுபதி நடிக்கும் படம் தவமாய் தவமிருந்து படத்தைப்போல் இருக்கும் அண்ணன் தங்கையை கண்ணில் வைத்து பாதுகாக்கும் படமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

cheran-and-vijay-sethu
cheran-and-vijay-sethu

Leave a Comment