அஜித் வழிதான் சரி பின்பற்றும் விஜய்.? இனிமே இப்படித்தான் போல

Thalapathy vijay : தளபதி விஜய் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து மாஸ் காட்டி வருகிறார். வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து “லியோ” படத்தில் நடித்துள்ளார் படம் வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதற்கு முன்பாக  ரசிகர்களை குஷிப்படுத்த லியோ டீம் அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி இசை வெளியீட்டு விழாவையும் நடந்த திட்டம் போட்டிருந்தது ஆனால் அதற்கு முன்பாகவே கேன்சல் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இதற்கு அரசியல் அழுத்தம் இருக்கும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் லியோ சைடுல இருந்து அதிகாரப்பூர்வமாக தகவல் வருவது என்னவென்றால்.. கூட்டம் அதிகம் சேர்ந்தால் ஏதேனும் அசம்பாவிதம்  ஏற்பட்டு விடும் அது விஜய்க்கு கெட்ட பெயராக அமைந்து விடும் அதனால் தான் இசை விட்டு விழா கேன்சல் என கூறி வருகின்றனர். இதைப் பார்த்த ரசிகர்கள் இப்பொழுதுதான் விஜய் யோசிக்கிரா.?

ஆனால் இதை அஜித் முன்பு செய்து விட்டார் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். நடிகர் அஜித்குமாருக்கு தமிழ் நாட்டில் கோடான கோடி ரசிகர்கள் இருக்கின்றனர் சினிமா பிரபலங்கள் கூட இவருக்கு ரசிகராக உள்ளனர் ஆனால் இப்படி இருந்தும் தன்னுடைய ரசிகர்கள் மன்றத்தை கலைத்தார்,

பொது நிகழ்ச்சிகளை தவிர்த்தார். பிரமோஷன்களில் கலந்து கொள்வதில்லை ரசிகர்களை பார்த்தால் ஏதாவது பிரச்சனை ஏற்படும் என்பதால் அதனை தவிர்த்து வருகிறார் ஆனால் விஜய்க்கு இப்போது தான் அது புரிகிறது. மேலும் விஜய் தளபதி 68 படத்தின் ப்ரோமோஷன் மற்றும் இசை வெளியிட்டு விழா போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா.? இல்லையா.? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.