இதுக்கு விஜய் ஒத்துப்பாரா.? தளபதி 68 இல் மிகப்பெரிய ட்விஸ்ட் வைத்த பட குழுவினர்.. எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் டைட்டில் பிரமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து லியோ திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, பிரிய ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், மிஸ்கின், அர்ஜுன், உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். காஷ்மீரில் தொடங்கப்பட்ட முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் ஆயுதபூஜையை முன்னிட்டு லியோ திரைப்படம் வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

மேலும் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படம் கலையான விமர்சனத்தை பெற்றதை தொடர்ந்து தற்போது லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் கனகராஜ் தான் என்றும் கூறப்படுகிறது ஏனென்றால் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அது மட்டும் இல்லாமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான முதல் திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்ற நிலையில் தர்பொது இந்த கூட்டணி மறுபடியும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.

தளபதி 67 திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் ஆத்ததாக 68 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை தன்னை வைத்து மூன்று படங்களை தொடர் வெற்றியாக கொடுத்த இயக்குனர் அட்லி உடன் இணை இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தை அவருடைய மேலாளர் ஜெகதீஷ் தயாரிக்க இருப்பதாக தற்போது ஒரு தகவல் உலா வருகிறது.

தளபதி 67 திரைப்படமான லியோ திரைப்படத்தை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் தளபதி 68 வது திரைப்படத்தை மேலாளர் ஜெகதீஷ் அவர்கள் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது இதற்கு நடிகர் விஜய் அவர்கள் ஒப்புக் கொள்வாரா என்ற குழப்பம் இருப்பதாக கூறபடுகிறது.

Leave a Comment