வெற்றி பெற்ற வானதி சீனிவாசன் : அஜித் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவாரா.? சமூக வலைத்தளபக்கத்தில் கேள்வி கேட்க தொடங்கிய ரசிகர்கள்.

0

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசன் களமிறங்கினார் இவருக்கு அங்கு நல்ல பெயர் இருப்பதால் தற்பொழுது அங்கு  வெற்றி மகுடத்தை சூட்டினார் இவரை எதிர்த்து நின்ற கமலஹாசனை 1400 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி கனியை ருசித்தார் வானதி சீனிவாசன்.

அவர் வெற்றி பெற்றதை குறித்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் வானதி சீனிவாசன் அவர்களும் ட்விட்டர் தன்னுடன் பணியாற்றிய உறுப்பினர்களுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இதனைக் கண்ட அஜித் ரசிகர்கள் அக்கா நீங்க ஆரம்பத்தில் என்னை ஜெயிக்க வைத்தால் அஜித் ரசிகர்கள் வேண்டுகொள்ளுக்கு இணங்க வலிமை படத்தின் அப்டேட்டை நான் கேட்டு வாங்கி தருவேனே சொன்னீர்கள் நாங்கள் உங்களுக்கு தான் ஓட்டு போட்டோம் நீங்கள் வலிமை படத்தின் அப்டேட்டை சீக்கிரம்  கேட்டு சொல்லுமாறு கூறி  உள்ளனர் ரசிகர்கள்.

அவரும் எந்த பதிலும் தெரிவிக்காவிட்டால் ரசிகர்கள் தொடர்ந்து பிடிவாதம் பிடித்துக் கொண்டு அக்கா உங்களுக்கு வாக்களித்த நீங்கள் ஏமாற்றி விடாதீர்கள் உங்கள்  கனவை நிறைவேற்றி விட்டோம் உங்களை நம்புகிறோம் நீங்கள் கேட்டு சொல்லுங்கள் என நம்பிக்கையுடன் இருக்கிறோம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

இச்செய்தி தற்பொழுது  உலகத்தில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங்கில் வர தொடங்கி உள்ளது மேலும் தற்பொழுது சினிமா உலகிலும் பேசுபொருளாக இந்த நிகழ்வு மாறி உள்ளது.

தல ரசிகர்களின் ஆசையை நிறைவேற்று வாரா என்பதுமிகப் பெரிய கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.