சினிமா உலகிற்கு வரும் புதுமுக நடிகர்கள் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்களின் மனதை வென்ற ஒருவரை ரோல் மாடலாக வைத்துக்கொண்டு சினிமாவில் களம் இறங்குவது வழக்கம் அந்த வகையில் ரஜினிகாந்தின் ஸ்டைல் மற்றும் அனைத்தையும் அப்படியே அடிபிறழாமல் செய்து வருபவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
ஆரம்பத்தில் ரஜினி காமெடி மற்றும் ஆக்ஷன் கலந்த திரைப்படங்களில் நடிப்பது வழக்கம். தற்போது சிவகார்த்திகேயனும் செய்து வருகிறார் இதனால் அவருடைய படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது மேலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெறுவதால் வெகுவிரைவிலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றதோடு மட்டுமல்லாமல் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் லிஸ்டிலும் இடம் பிடித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
தற்போது கூட சிவகார்த்திகேயன் நடிப்பில் பல படங்கள் வெளிவர காத்திருக்கின்றன அந்த வகையில் டாக்டர், டான், அயாலன் போன்ற படங்கள் வெளிவர இருக்கின்றன இப்படியே தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு வெற்றியை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் வருத்தபடாத வாலிபர் சங்கம் இரண்டாம் பாகம் உருவாகுமா என கேட்டனர் அதற்கு அவர் பதிலளித்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று பிரித்து வார்த்தை நடந்தது என்னை பொருத்தவரை அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஒரு ஜாலியாக எடுக்கப்பட்ட படம். அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடியாது ரெமோ படத்தில் வரும் நர்ஸ் கதாபாத்திரத்தை வைத்து வேண்டுமானால் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என கூறினார்.