விக்ரம் படத்தின் வசூலை வேட்டையாடுமா “ஜெயிலர்”..! நச்சுன்னு பதில் அளித்த திருப்பூர் சுப்ரமணியம்

Jailer : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது படம் முழுக்க முழுக்க ஆக்சன், காமெடி, எமோஷனல் என அனைத்தும் கலந்த படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் கைத்தட்டல் வாங்கியுள்ளது.

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து மோகன்லால், விநாயகன், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, சுனில், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து உள்ளது படத்திற்கு இன்னும் பிளஸ் ஆக அமைந்துள்ளது.

ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 4000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது அனைத்து இடங்களிலுமே பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் இதனால் படத்தின் வசூலும் அடித்து நொறுக்கி வருகிறது. இதுவரை மட்டுமே 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கமலின் “விக்ரம்” படத்தின் வசூல் சாதனையை “ஜெயிலர்” முறியடிக்குமா? முறியடிக்காதா என்ற கேள்விக்கு திருப்பூர் சுப்பிரமணியம் பதிலளித்துள்ளார் அவர் சொன்னது.. கமலஹாசனின் விக்ரம் படத்தின் வசூல் நிலவரம் ராஜ்கமல் நிறுவனத்திற்கு தான் தெரியும்..

ஆனால் 400 கோடிக்கு மேல் வந்துள்ளதாக கூறுகின்றனர் அதேபோல ஜெயிலர் படத்தின் வசூல் நிலவரம் சன் பிக்சர்ஸ் தான் தெரியும்.. எங்களைப் பொருத்தவரை புதிதாக ரிலீஸ் ஆகிற அத்தனை பெரிய படங்களும் தியேட்டருக்கு மக்களை கொண்டு வருகிறதா? இல்லை என்பதை மட்டும் தான் பார்ப்போம்..

பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் போட்டியெல்லாம் தேவையில்லாத சண்டையை உருவாக்கும் மீடியாக்களும், youtube சேனல்களும் தான் இதனை ஊதி பெரிதாக்குகிறார்கள் ரசிகர்கள் சண்டையை  போடுகின்றனர் விக்ரம் படம் நல்ல வசூலை பெற்றது அதேபோல ஜெயிலர் படமும் அமோக வசூலை  பெறும் அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை என கூறியுள்ளார்.

Leave a Comment