விஜய்யின் 66வது படத்தில் பிரபுதேவா இணைகிறாரா இல்லையா.? அவர் கொடுத்த சூப்பர் பதில்.

vijay-and-prabhu-deva
vijay-and-prabhu-deva

தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டு இருப்பவர் தளபதி விஜய் இவர் கடைசியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் உடன்  முதன்முறையாக கைகோர்த்து தனது 65வது திரைப்படமான  பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக முழுமை பெற்றது அதனைத் தொடர்ந்து  படத்தின் டப்பிங் பணிகள் வெகு விரைவிலேயே தொடங்கி இருக்கின்றன முதலில் விஜய் டப்பிங் பேசி முடித்துவிட்டு அடுத்ததாக தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கை கோர்த்தது பணிபுரிகிறார்.

தளபதி 66 வது திரைப்படத்தை தில் ராஜூ என்பவர் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க  இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் இந்த படத்தில் இணைவதற்கு முன்பாகவே படத்தின் கதைக்கு ஏற்ற படியான நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வருவதாக ஒரு செய்தி உலா வருகிறது.

அந்த வகையில் தளபதி விஜயின் 66 வது திரைப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதுபோல நடிகர் பிரபுதேவா பணிபுரிய இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.

அதிலும் பிரபுதேவா இரண்டு பாடலுக்கு அவர் நடன இயக்குனராக பணியாற்ற விஜய் கேட்டுக் கொண்டதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரபுதேவா பதிலளித்து உள்ளார் அவர் கூறியது அந்த தகவல் வெறும் வதந்தி என கூறி முடித்துள்ளார்.