விஜய், கமலை தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து படம் எடுப்பாரா லோகேஷ்.? பேட்டியில் சொன்ன பதில்..

ajith-
ajith-

இளம் இயக்குனர்கள் காலத்திற்கு ஏற்றவாறு  சிறப்பான படங்களை கொடுத்து அசத்துகின்றனர் அந்த வகையில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து நடிப்பிற்கு பெயர்போன உலகநாயகன் கமலஹாசனுடன்..

முதல் முறையாக லோகேஷ் இணைந்து விக்ரம் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது. விக்ரம் படத்தில் கமலுடன் சேர்ந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர்.

படம் வெளிவருவதற்கு முன்பாக படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை கூறி வருகிறார் இயக்குனர். அதேசமயம் கேட்கும் கேள்விகளுக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பான முறையில் பதிலளித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில்  நீங்கள்..

கமல் விஜய் போன்ற டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்கி அசத்தி உள்ளீர்கள் நடிகர் அஜித்தை வைத்து படங்களை இயக்க வாய்ப்புகள் உள்ளதா என கேட்டுள்ளனர் அதற்கு அவர் சொன்னது.

நிச்சயமாக  நடிகர் அஜித் குமார் அவர்களை வைத்து ஒரு சிறப்பான படத்தை இயக்குவேன் என அதிரடியாக கூறினார் மேலும் அதற்கான நேரம் கதை அமையும் பட்சத்தில் இது கைகூடும் என கூறியுள்ளார். இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில்  பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மேலும் அஜித் ரசிகர்கள் இந்த செய்தியை கொண்டாடி வருகின்றனர்.