லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்தாலும் மீதி நேரங்களில் தனது காதலன் விக்னேஷ் சிவனை அழைத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு சுத்துவது, கோயில் குளம் போவது என இருந்து வருகிறார்.
ஆறு வருடங்களாக காதலித்து வரும் இவர்கள் இருவரும் வருகின்ற ஜூன் 9ஆம் தேதி திருப்பதி கோயிலில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் சினிமா பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை கூறி வருகின்றனர் அண்மையில் கூட லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.
இருவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் வெற்றி பெற திருப்பதி கோயிலுக்கு போய் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அந்த வகையில் O2, கனெக்ட் ஆகிய படங்கள் இருக்கின்றன. நேற்று நயன்தாரா நடிப்பில் உருவான O2 டீஸர் வெளியாகி அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் மகாபலிபுரம் அருகே உள்ள ஒரு உணவகத்தில் கடல் சார்ந்த உணவுகளை சாப்பிட்டு உள்ளதாக ஒரு தகவல்கள் வெளிவருகிறது.

கல்யாணத்திற்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு அதுக்குள்ள ஊர் சுற்றி வருகிறார்கள் இதை அறிந்த ரசிகர்கள் கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்சம் நாள் தான் இருக்கு அடக்க ஒடுக்கமாக வீட்டில் இருப்பது தான் நல்லது எனக் கூறி நயன்தாரா மற்றும் விக்கிக்கு அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.