சிசிடிவி காட்சியுடன் கையும் களவுமாக மாட்டிய விஜய் டிவி பிரபலம் தாடி பாலாஜியின் மனைவி.! கைது செய்த போலீசார்..

தமிழ் சின்னத்திரை மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் தான் நடிகர் தாடி பாலாஜி. சின்னத்திரையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரீட்சியமானார். இவ்வாறு மிகவும் நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு பிறகு சொல்லும் அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய மனைவியுடன் பங்குப்பெற்றார். இந்நிகழ்ச்சிற்க்கு பிறகு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், பாப்புலரான நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வந்தார். பிக்பாஸ் மூலம் இவர்கள் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காலங்களில் இவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட ஆரம்பித்தது.

நித்தியா தன்னுடைய மகளுடன் இணைந்து பாலாஜியின் மீது புகார் அளித்திருந்தார் எனவே அதற்கான விசாரணைகளும் நடைபெற்றது. அதாவது பாலாஜிக்கு போதை பழக்கம் அதிகமாக இருப்பதால் தன்னையும் தன்னுடைய மகளையும் குடித்துவிட்டு மோசமாக நடத்துவதாக கூறியிருந்தார். தற்பொழுது நித்யா சென்னையை அடுத்த மாதாவரத்தில் தன்னுடைய மகளுடன் வசித்து வருகிறார்.

இவர் தங்கி இருக்கும் எதிர் வீட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருவது வழக்கமாக இருக்கிறது இந்நிலையில் நேற்று திடீரென நித்தியா தன்னுடைய எதிர் வீட்டுக்காரரின் காரை கல் விசி சேதப்படுத்திய சிசிடிவி காட்சி தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

எனவே சிசிடி ஆதாரத்தை வைத்து மாதாவரம் காவல் நிலையத்தில் நித்யாவிற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிறருடைய சொத்தை சேதப்படுத்திய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து வித்யாவை கைது செய்துள்ளனர் உடனே நித்யா ஜாமினில் வெளிவந்த நிலையில் இந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் கலந்து கொள்ளும் பொழுது நித்தியா அடங்காமல் மிகவும் திமிராக இருந்து வந்த நிலையில் இந்நிகழ்ச்சிக்கு பிறகு கூட பாலாஜி உதவி செய்ய முயன்றும் அதனை தவறாக பயன்படுத்திக் கொண்டார் மேலும் நித்தியா தன்னுடைய மகளுடன் தற்கொலை செய்து கொள்வேன் என்னை மிரட்டி பணம் கேட்டதாகவும் பாலாஜி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

Leave a Comment