அழகில் “துல்கர் சல்மானை” தூக்கி சாப்பிடும் மனைவி மற்றும் மகள்.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்.

மலையாளம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வந்த முன்னணி நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும் தற்போது இரு மொழிகளிலும் நடித்து எனக்காக ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.

துல்கர் சல்மான் வாரிசு நடிகரின் மகனாக இருந்தாலும் அதை பெரிதாக பயன்படுத்திக் கொள்ளாமல் தனது நடிப்பை மட்டுமே பெரிதும் நம்பி நடித்து வருவதால் இவருக்கு சினிமாவில் நல்ல பெயர் இருப்பதோடு படவாய்ப்புகளும் தற்போது அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றுள்ளதால் அடுத்தடுத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள உதவும் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக தமிழில் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தமிழிலும் தற்போது அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார்.

இப்படி இருக்க அவர் ரம்ஜான் தின விழாவை முன்னிட்டு துல்கர் சல்மான் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஒன்று சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் பட்டையை கிளப்பி வருகிறது மேலும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அழகில் துல்கர் சல்மானை விட அவரது மனைவி மற்றும் மகள் அழகாக இருக்கிறார்கள் என்று கூறி புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

இதோ நீங்களே பாருங்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment