நாட்டு நாட்டு பாடலுக்கு கிடைத்த விருது ஏன் “நாக்க முக்க” பாடலுக்கு கிடைக்கவில்லை.! கோபத்தில் கொந்தளித்த பிரபல நடிகர்…

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வானது. மேலும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து பல பிரபலங்கள் ராஜமௌலிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து நடிகர் நகுல் தானது twitter பக்கத்தில் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வாங்கியது குறித்து வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார் அது மட்டுமல்லாமல் அந்த வாழ்த்துடன் சேர்த்து ஒரு பதிவையும் போட்டு இருக்கிறார்.

அதாவது நடிகர் நகுல் அவர்கள் நடிப்பில் கடந்த 20௦8 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் காதலில் விழுந்தேன். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் நாக்கு முக்க பாடல் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

அது மட்டுமல்லாமல் இந்த படம் வெளியான போது அந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக நாக்கு மூக்க பாடல் போடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி உலகம் முழுவதும் பேமஸான இந்த பாடலுக்கு ஏன் இதுவரைக்கும் ஆஸ்கர் விருது கொடுக்கப்படவில்லை என்பது குறித்து நகுல் ஒரு மீமை போட்டு இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் ரசிகர்களும் ஏன் நாக்க முக்க பாடலுக்கு ஆஸ்கர் விருது கொடுக்கவில்லை என்பது குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். இவருடைய அந்த டுவிட்டர் பதிவு ரசிகர்கல் மத்தியில் செம்ம வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த நாக்க முக்க பாடலை நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரு பாட்டினால் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் தீவிர ரசிகர்களாக பலர் சுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் ஒரு பாட்டிற்கு ஏன் இதுவரைக்கும் ஆஸ்கர் விருது வழங்கப்படவில்லை என்பது குறித்து ரசிகர்களும் நகுளும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இவருடைய அந்த பதிவு ரசிகர்கல் மத்தியில் செம்ம வைரளாகி வருகிறது.

அதுமட்டும் இல்லாமல் நாக்கு முக்க பாடலுக்கு ஐரோப்பாவில் இசைக்காக மட்டும் வழங்ககூடிய ஒரு Award-ஐ ஆசிய கண்டத்துலயே வாங்குனு ஒரே இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனிதான் அப்படி இருக்கும் நிலையில் இந்த பாடலுக்கு ஏன் ஆஸ்கர் விருது வழங்கப்படவில்லை என்று பல கேள்விகள் எழுந்து உள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment