தளபதி விஜய் கடைசியாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்றது மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார் ஆனால் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பை விட தளபதி 67 திரைப்படத்தின் எதிர்பார்ப்பு தான் ரசிகர்களிடம் இரண்டு மடங்காக அதிகரித்திருந்தது.
அதற்குக் காரணம் தளபதி 67 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான் இயக்க இருக்கிறார்.இந்த நிலையில் ஏற்கனவே விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் இணைந்திருந்தார் அந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
அதற்குக் காரணம் லோகேஷ் கனகராஜ் கடைசியாக இயக்கிய விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம் ஏகப்பட்ட வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் வசூலில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது இந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்திற்கு லியோ என பெயரிட்டுள்ளார்கள் இந்த லியோ திரைப்படத்திற்கு அனிருத் ராக்ஸ்டார் அவர்கள் இசையமைக்க இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் படத்தின் டைட்டில் வீடியோவிற்கு அனிருத் மிகவும் பிரம்மாண்டமாக இசையமைத்து வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் பிரியா ஆனந்த், சஞ்சய், மிஸ்கின், கௌதம் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான், மேத்யூ, தாமஸ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்த வருகிறார் இவர் நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் உடன் இணைந்து நடிப்பதால் உச்சகட்ட கொண்டாட்டத்தில் இருக்கிறார் மேலும் இந்த திரைப்படத்திற்கு வசனங்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இயக்குனர் ரத்தினகுமார் திராஜ் வைத்தி ஆகியவர்கள் எழுதியுள்ளார்கள்.
சண்டைக் காட்சிக்கு அன்பரிவு மாஸ்டர் பணியாற்றியுள்ளார். லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்துள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கப்பட்டது அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட லியோ திரைப்படத்தின் வசனகர்த்தார் ரத்னகுமார் படம் குறித்த கேள்விக்கு பதில் கூறினார்.
பத்திரிக்கையாளர் லீயோ திரைப்படத்தின் டைட்டில் எதற்காக ஆங்கிலத்தில் வைக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்கள் அதற்கு இந்த திரைப்படம் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கிறது அதனால் சிறிய அளவில் எல்லோருக்கும் புரியும் வார்த்தையாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதால் இந்த தலைப்பு வைக்கப்பட்டது என ரத்தினகுமார் பதில் அளித்தார்.