திரையுலகில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர் ஆனால் ஒரு சில நடிகர்களுக்கு ரசிகர்கள் ரொம்ப தீவிரமாக இருப்பார்கள் அப்படி 80,90 காலகட்டங்களில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜயகாந்த்.
ரசிகர்கள் இவரை செல்லமாக குட்டி எம்ஜிஆர் என்றும் அழைத்து வந்தனர் ஏனென்றால் அந்த அளவிற்கு படங்களில் நடிப்பதையும் தாண்டி தன்னால் முடிந்த உதவிகள் மற்றும் வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவராக இருந்தார். இவரை போலவே தற்பொழுது திரையுலகில் ஜொலிப்பவர் அஜித்.. விஜயகாந்த், அஜித்துக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
அவர் சொன்னது.. விஜயகாந்த் அரசியலில் குதிப்பதற்காக நடிகர் சங்க தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார் இது அரசியலுக்காக அவரது செய்த தியாகம் ஆனால் எங்கு நம்மை அரசியலில் இழுத்துவர்கள் பயத்தில் அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்தார். திருமணம் முன்பு வரை அஜித் பல கிசுகிசுகளுக்கு ஆளானார் ஒரு நடிகையின் மீது காதல் கொண்டு அந்த நடிகை வீட்டுக்கு பெண் கேட்டு சென்றார்.
அதேபோலதான் விஜயகாந்த்தும் திருமணத்திற்கு முன்பு வரை நடிகை ராதிகா உட்பட சில நடிகைகளுடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டார் ஆனால் விஜயகாந்த், அஜித்தும் திருமணத்திற்கு பிறகு ஒரு நல்ல நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் என கூறினார் மேலும் பேசி அவர் இருவருமே தனது ஒரிஜினாலிட்டியை மறைத்து நடிக்கவில்லை..
அஜித் தன்னுடைய நரை முடியை வைத்துக்கொண்டு இன்றுவரை வீக் இல்லாமல் நடிது வருகிறார் அதே போல் தான் விஜயகாந்த் . இரண்டு பேருமே மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர்கள் கருணாநிதியை அமர்ந்திருந்த ஒரு மேடையில் அவர் முன்னாடி அரசியல் பிரமுகர்களால் நடிகர்கள் துன்பப்படுகிறோம் என வெளிப்படையாக கூறினார்.
அதே போல விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆன பிறகு கருணாநிதியின் தவறுகளை பகிரங்கமாக சுட்டிக்காட்டி இருக்கிறார். நடிகர் சங்க கடனை அடைத்தவர் விஜயகாந்த் என்றும், தனிப்பட்ட முறையில் நடிகர் சங்கத்திற்காக பெரிய அளவில் உதவியை செய்தவர் அஜித் என்றும் இருவரையும் பற்றி மாறி மாறி புகழ்ந்து பேசினார் பயில்வான் ரங்கநாதன்.