மும்பை இந்தியன்ஸ் அணியில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை – பௌலிங் கோச் விளக்கம்.!

ஐபிஎல் 15வது சீசன் அண்மையில் கோலாகலமாக நடந்து முடிந்தது.  இந்த தடவை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டது. மொத்தம் 10 அணிகள் இந்த ஆண்டு மோதின இதில் குஜராத் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை தன் வசப்படுத்தியது.

ஐந்து முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி சொல்லிக்கொள்ளும்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாததால் பாயிண்ட் டேபிளில் கடைசி இடத்தைப் பிடித்தது. இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.  இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் சேன் பான் கூறுகையில் இந்த தடவை மும்பை இந்தியன்ஸ் அணியில் இளம் வீரர்கள் அதிகம்.

அவர்கள் அணிக்கு தயாராக சிறிது காலதாமதம் எடுத்துக்கொள்ளப்பட்டது கடைசி கட்டத்தில் சரியான வீரர்களை தேர்வு செய்து ரோகித் சர்மா வழிநடத்தினார் ஒருவழியாக நாங்கள் நல்ல வீரரை கடைசி நேரத்தில் தேர்வு செய்தோம். நன்றாக விளையாடினார் இருப்பினும் எங்களால் ப்ளே ஆப்   செல்ல முடியவில்லை.

அடுத்த வருடமும் அந்த வீரர்களை வைத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம் என கூறினார். மேலும் அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ஒன்றாக.. இரண்டு வருடமாக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை ஏலத்தில் எடுக்கிறீர்கள் ஆனால் அணியில் மட்டும் ஏன் வாய்ப்பு தரவில்லை என கேட்டுள்ளனர் அதற்கு பதில் அளித்த சேன் பான்ட்.

அர்ஜுன் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் வெற்றி பெற  இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் குறிப்பாக பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கடுமையாக உழைத்தால் அவர் நல்லதொரு ஃபார்முக்கு வருவார்  அதன்பின் நிச்சயமாக அணியில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என கூறினார்.

Leave a Comment