ஆசை அறுபது நாள் மோகம் 30 நாளாக மொத்தம் இரண்டே வருஷத்தில் விவாகரத்து ஏன்..! மனம் திறந்த காயத்ரி ரகுராம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் தான் காயத்ரி. நடன இயக்குனரும் நடிகையுமான காயத்திரி ரகுராம் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டதன் மூலம் பலருடைய வெறுப்புகளை சம்பாதித்தார். முக்கியமாக இந்நிகழ்ச்சியில் இவர் ஜூலி உடன் இணைந்து கொண்டு ஓவியாவை சண்டை போட்டு வந்த நிலையில் ரசிகர்கள் இவரை விமர்சனம் செய்து வந்தார்கள்.

இந்நிலையில் இவர் பிரபல நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டர் அவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தன்னுடைய 14 வயதில் சினிமா துறைக்கு அறிமுகமானார். அந்த வகையில் 2002ஆம் ஆண்டு பிரபுதேவா மற்றும் பிரபு ஆகியோர்களின் நடிப்பில் வெளிவந்த சார்லி சாப்ளின் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் அதன் பிறகு ஸ்டைல், பரசுராம், விசில், விகடன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இவ்வாறு சினிமாவிற்கு அறிமுகமான சில காலங்களிலேயே கதாநாயகியாக நடித்து வந்த இவருக்கு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை இந்நிலையில் இவர் நான் ஒருவரை உண்மையாக காதலித்தேன் ஆனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டார் என்று கூறினார்.

அதாவது இவருடைய கணவர் வேறு யாருமில்லை 2006ஆம் ஆண்டு அமெரிக்க மென்பொருள் பொறியாளர் தீபக் சந்திரசேகர் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் ஹிந்து முறைப்படி நடந்தது எனவே இவர்கள் ஒரு திருமணத்தில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் 2008ஆம் ஆண்டு காயத்ரி மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மீது காயத்ரி பெண் கொடுமை செய்வதாக கூறி நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி இருந்தார்.

எனவே இவர்கள் 2010ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்றார்கள் எனவே சமீபத்தில் தன்னுடைய விவாகரத்து பற்றி கூறிய இவர் நான் அப்பொழுது சிறிய வயது என்னுடைய அப்பா தான் எனக்கு திருமணம் செய்து வைத்தார். 22 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது பிறகு குறுகிய காலத்தில் விவாகரத்தும் நடந்தது அதில் அவரையும் குற்றம் சொல்ல முடியாது என்னையும் குற்றம் சொல்ல முடியாது.

kayathri raguram
kayathri raguram

விவாகரத்திற்கு பிறகு அவர் அவருடைய சொந்த வாழ்க்கையை தேடி சென்றுவிட்டார் பின்னர் அதனை மீண்டும் மீண்டும் கேட்பதற்கு அர்த்தமே இல்லை என்று கூறினார். மேலும் தன்னுடைய வாழ்க்கையை அரசியலுக்காக முழுவதுமாக அர்ப்பணித்து விட்டதாகவும் கூறினார். தற்பொழுது எனக்கு 40 வயதை எட்டி இருக்கிறது அப்பொழுது இருந்ததைவிட இப்பொழுது கோபம் மிகவும் குறைந்து இருக்கிறது.

மேலும் துன்பங்களை ஏற்றுக் கொள்ளும் சக்தியை இந்த இடைவெளி கொடுத்திருக்கிறது நான் எந்த கதவுகளையும் மூடவும் இல்லை திறக்கவும் இல்லை என்னுடைய பாதையை முழுவதுமாக கடவுளிடம் அர்ப்பணித்து விட்டேன் அவர் என்ன முடிவு செய்கிறாரோ அதை நான் ஏற்றுக் கொள்வேன் என்றும் கடந்த நான்கு வருடங்களாக என்னுடைய வாழ்க்கையை அரசியலில் முழுவதுமாக கொடுத்து வட்டதாக கூறினார்.

Leave a Comment