தமிழ் சினிமாவை தன்னுடைய தனுச்சையான நகைச்சுவையால் பிரபலமடைந்தவர் நடிகர் வடிவேலு தன்னுடைய பாடி லாங்குவேஜ் மக்கள் மத்தியில் காமெடி நடிகர் என்ற இடத்தை பிடித்தார். இவர் நகைச்சுவையால் பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன.
வடிவேலு மற்றும் அஜித் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்கள் அந்த வகையில் பவித்ரா, ஆசை, மைனர் மாப்பிள்ளை, ஆனந்த பூங்காற்று, ராஜா ஆகிய திரைப்படங்கள் ஆகும், அதன் பிறகு இருவரும் இணைந்து ஒன்றாக நடிக்கவில்லை,
ராஜா திரைப்படம் 2002 ஆம் ஆண்டு வெளியானது அந்த திரைப்படத்திற்கு பிறகு அஜித் மற்றும் வடிவேலு இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை இது குறித்து பல விவாதங்கள் சினிமா வட்டாரத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ராஜா திரைப்படத்தை இயக்கிய எழில் ஒரு பேட்டியில் இது குறித்து பேசி உள்ளார்.
படப்பிடிப்பின் பொழுது வடிவேலு அஜித்தை ஒருமையில் பேசியதால் அஜித்திற்கு பிடிக்கவில்லை எனவும் வாடா போடா என்ற வார்த்தைகளை படபிடிப்பில் மட்டுமல்லாமல் படபிடிப்பிற்கு வெளியேவும் பயன்படுத்தியதாகவும் அதனால்தான் மீண்டும் வடிவேலுவுடன் இணைந்து நடிக்க விருப்பம் இல்லை என்ற முடிவிற்கு வந்ததாகவும் கூறுகிறார்.
மற்றொரு கோணத்தில் வடிவேலுவின் தனிப்பட்ட பாணியும் இதில் பங்கு வகித்திருக்கலாம் வயதில் மூத்தவராக இருந்த வடிவேல் சக நடிகர்களுடன் நெருக்கமாக பழகுவது வழக்கம் ஆனால் அஜித்தின் ஆளுமை மற்றும் தனி மரியாதை உணர்வு இந்த அணுகுமுறையை ஏற்கவில்லை என்று கூறலாம்.
இப்படி சின்ன மரியாதை குறைவு காரணமாக 23 வருடங்களுக்கு அஜித் மற்றும் வடிவேலு இருவரும் இணைய முடியவில்லை அதேபோல் வடிவேலு அரசியல் ஈடுபாடு விஜயகாந்த் மற்றும் இயக்குனர் சங்கருடன் இடையே மோதல் ஆகையால் 10 வருடம் வடிவேலுக்கு சினிமாவில் கேப் விழுந்தது அதன் பிறகு மாமன்னன் திரைப்படத்தில் மீண்டும் தலை தூக்கினார் மீண்டும் அஜித் உடன் இணைய வடிவேலுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.