எதுக்கு நீ நடிக்க வந்த.. இட்லி கடைக்கே போக வேண்டியது தானே பிரபல நடிகரை திட்டித்தீர்த்த பாலா – அதிர்ந்துபோன அரங்கம்.!

bala
bala

சினிமா உலகில் இப்பொழுது இருக்கும் இயக்குனர்கள் ஒவ்வொருவரும் கமர்சியல் படங்களை கொடுத்து நன்றாக வளர்ந்து காசு பார்க்கின்றனர் ஆனால் தான் இயக்கும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நிலைத்து நின்று பேசவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து செதுக்கியே தேசிய விருதுக்காக போராடி வருபவர் தான் இயக்குனர் பாலா.

இவர் இதுவரை இயக்கிய பிதாமகன், அவன் இவன், நான் கடவுள், நாச்சியார், பரதேசி  போன்ற பல சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி உள்ளார். பாலா தன் படத்தின் கதை தான் நினைப்பது போல வரவேண்டும் என்பதற்காக நடிகர் நடிகைகளை சற்று துன்புறுத்தி தான் படத்தை எடுக்கிறார்.

என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதை அவரும் பல தடவை வெளிப்படையாக பேசியுள்ளார் ஆனால் தற்போது அதைப் பற்றியே நான் பேசவில்லை.. பொது மேடை நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் பாலா நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனியை பற்றி பொது மேடையில் புகழ்ந்து பேசி அசத்தினார்.

அவரை தொடர்ந்து கஞ்சா கருப்பு பற்றியும் பேசினார். அவரையும் புகழ்ந்து தான் பேசுவார் என அரங்கமே நினைத்தது ஆனால் அதற்கு எதிர்மாறாக பேசி அதிர வைத்தார் வார்த்தைகளே இல்லாமல் திட்டித் தீர்த்தார் அதில் அவர் சொன்னது  :

நீ ஒரு வடிகட்டின முட்டாள் உனக்கு இது தேவையான படம் இல்லன்னு தானே இட்லி கடைக்கு போன மறுபடியும் வந்துட்டானேனு கிண்டலா மேடையில் கேட்டார் இதை கேட்ட அனைவரும் சிரிப்புடன் அரங்கை அதிர வைத்தனர்.