ஷாஜகான் படத்தில் “ஐட்டம் பாடலுக்கு” நடனம் ஆடியது ஏன்.? மீனா கொடுத்த விளக்கம்

90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா முதலில் ரஜினி போன்ற டாப் நடிகரின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்பு பருவ வயதை எட்டிய பிறகு அதே நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வெற்றி கண்டார். திரை உலகில் தொடர்ந்து வெற்றிகளை கொடுத்ததால் இவருக்கு என ரசிகர்கள் அதிகமாகி  உருவாகினார்.

இதனால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்தது. இந்த நிலையில் தான் நடிகை மீனா பிரபல தொழிலதிபர் வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற மகள் பிறந்தார் அவரும் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு டாப் நடிகரின் படங்களில் நடித்து வந்தார்.

இப்படி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த மீனாவுக்கு 2022 பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. மீனாவின் கணவர்  உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். அதனை தொடர்ந்து சில மாதங்கள் வீட்டிலேயே முடங்கி கடந்தார் மீனா.. இதை பார்த்த அவரது நண்பர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரை மீட்டு எடுத்தனர்.

தற்பொழுது மீனாவும் வெளி உலகத்திற்கு வந்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள் இதனை எடுத்து பல பேட்டிகளில் தன்னுடைய சினிமா பயணம் குறித்து பேசி வருகிறார் அப்படி அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய மீனாவிடம் ரசிகர் ஒருவர் விஜயின் ஷாஜகான் படத்தில் “சரக்கு வச்சிருக்கேன்” ஐட்டம் பாடல்கள் டான்ஸ் ஆடியது ஏன் என கேள்வி எழுப்பினார்.

மீனா பதில் அளித்தது.. அது என்ன பாட்டு நாம் எப்படி ஆட போகிறோம் என்பது பற்றிய எந்த ஐடியாவும் எனக்கு இல்லை ஆனால் அந்த பாடலில் விஜயுடன் போட்டி போட்டு  அடி இருப்பேன் என கூறி சிரித்தார் மேலும் அந்த சமயங்களில் நான் மிகவும் பிசியாக இருந்தேன் இதனால் விஜயின் இரண்டு பட வாய்ப்புகளை தவறவிட்டேன். அந்த அளவுக்கு பிசி என கூறியிருந்தார்.

Leave a Comment