“நேருக்கு நேர்” திரைப்படத்தில் அஜித் ஏன் நடிக்க மறுத்தார் தெரியுமா.? காமெடி நடிகர் சொல்லும் பதில்..

தமிழ் சினிமா உலகில் ரஜினியின் இடத்தை பிடிக்க தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பவர்கள் அஜித் விஜய்  இவர்கள் இருவரும் வருடத்தில் ஒரு சிறப்பான படத்தை கொடுத்து இன்றளவும் படங்களின் மூலம் மோதிக் கொள்கின்றனர் இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் தமிழ் சினிமாவில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் படங்களில் இணைந்து நடித்தாலும் இப்போது அதற்கான சாத்தியம் இல்லாமல் நடித்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சில இயக்குனர்களும் அஜித் – விஜய்யை வைத்து படம் எடுப்பேன் என உறுதியாக இருந்து வருகின்றனர்.

குறிப்பாக வெங்கட்பிரபு மங்காத்தா 2 திரைப்படம் அஜித் விஜய்யை வைத்து தான் எடுப்பேன் என ஒத்த காலில் நின்று வருகிறார். ஆனால் சினிமா ஆரம்பத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அப்படி ஒரு தடவைதான் நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் மீண்டும் ஒருமுறை அஜித் விஜய் இணைந்து நடிக்க முயற்சித்தனர்.

இதற்கான சூட்டிங் எல்லாம் சென்றதாம் முதல் இரண்டு மூன்று நாட்கள் ஷூட்டிங் சென்றது பின்பு சில காரணங்களால் இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் விலகினார் அதற்கான காரணம் இன்று வரையிலும் மர்மமாகவே இருந்து வருகிறது என்ற நிலையில் காமெடி நடிகரான தாமு சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் விஜய் குறித்து பேசியுள்ளார்.

நேருக்கு நேர் படத்தில் அஜித்தும் விஜய்யும் இணைந்து  நடிக்க இருந்தனர். ஆனால் இரண்டு மூன்று நாட்கள் ஷூட்டிங் எடுத்துவிட்டு பின் பல காரணங்களால் விலகினார்கள் அதற்கான காரணம் சரியாக தெரியவில்லை எதையும் சரியாக தெரிந்து கொள்ளாமல் பேசுவது ரொம்ப தவறு என கூறி உள்ளார்.

Leave a Comment