நடிகை வரலட்சுமி 37 வயதிலும் ஒண்டிக்கட்டையாக வாழ அந்த ஹீரோ தான் காரணமா.? வெளிவரும் தகவல்.

சரத்குமாரை தொடர்ந்து அவரது மகள் வரலட்சுமி சரத்குமார் சினிமா உலகில் கால் தடம் பதித்து வெற்றி மேல் வெற்றி கண்டு வருகிறார். நடிகை வரலட்சுமி சரத்குமார் முதலில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவான போடா போடி என்ற திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார்.

முதல் படத்திலேயே இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது அதனை தொடர்ந்து வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமா உலகில் ஹீரோயின் குணசத்திர கதாபாத்திரம் வில்லி என அனைத்து விதமான கதாபாத்திரத்திலும் நடித்து வெற்றிக்கனியை பெற்றார். குறிப்பாக இவர் நடித்த தாரதப்பட்டை, விக்ரம் வேதா, சண்டக்கோழி 2, மிஸ்டர் சந்திர மௌலி, சர்க்கார் போன்ற பல படங்கள் இவருக்கு பெயரை பெற்று தந்தது.

இருப்பினும் இப்பொழுது நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு சொல்லி கொள்ளும் படி வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் கிடைக்காததால் தெலுங்கு பக்கம் தொடர்ந்து நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். இப்படி சினிமாவில் வெற்றி பெற்றாலும் தனக்கு ரசிகர்கள் தேவை என்பதை நன்கு உணர்ந்து கொண்டு ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள மற்ற நடிகைகள் போல இவரும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு கவர்ந்து வருகிறார்கள்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. 37 வயதாகும் வரலட்சுமி சரத்குமார் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் ஒண்டிக்கட்டையாக வாழ்ந்து வருகிறார் இது பலருக்கும் கேள்வியை எழுப்ப வைத்துள்ளது.

நடிகை வரலட்சுமி சரத்குமார் சினிமா உலகில் நடித்து ஓடிக் கொண்டிருக்கும் பொழுது விஷாலுக்கும் இவருக்கும் இடையே காதல் இருந்ததாக சொல்லப்படுகிறது இந்த காதல் முடிவுக்கு வந்த பிறகு கூட விஷாலை மறக்க முடியாமல் வரலட்சுமி இருந்து வருவதால் அவர் திருமணம் என்கின்ற விஷயத்தை தள்ளிப் போட்டு வருகிறார் என சொல்லப்படுகிறது.

Leave a Comment