இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே போகபோறது இவரா.? கொண்டாடும் ரசிகர்கள்.

0
bigboss
bigboss

பிக் பாஸ் சீசன் 5 சமீபத்தில் தொடங்கப்பட்டு மக்களின் மனதைக் கவர்ந்து சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இரண்டு வாரங்கள் முடிவடைந்து தற்போது மூன்றாவது வாரம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் .

அதில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது 16 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் விளையாண்டு கொண்டு வருகின்றனர். இதற்கு முன் நடந்த சீசன்களை ஒப்பிட்டு பார்க்கையில் இந்த சீசனில் இன்னும் பெரிதாக சண்டைகள் ஏதும் வரவில்லை.

ஆனால் இந்த வாரத்தில் போட்டியாளர்கள் அவர்களுக்குள் சில வாக்கு வாதங்கள் நடைபெற்று வருகின்றன. போட்டியாளர்கள் அனைவரும் சின்ன சின்ன குழுக்களாக பிரிந்து விளையாண்டு கொண்டு வருகின்றனர் இதில் சொல்லிக் கொள்ளும்படி யாரும் தன்னிச்சையாக விளையாடவில்லை.

தற்போது பிக்பாஸ் வீட்டில் லக்சரி பட்ஜெட் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் 5 காயின்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட நபர்களில் யாரிடம் அதிக காய்ன்கள் இருக்கிறதோ அவர்கள் இந்த வாரம் எலிமினேட் ஆகாமல் சேவ் ஆவார்கள்.

இந்த நிலையில் தற்போது இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் போட்டியாளர்கள் குறித்த மக்களின் வாக்குகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி பிக் பாஸ் வீட்டில் இருந்து குறைந்த வாக்குகளைப் பெற்று இந்த வாரம் வெளியேற போகும் நபர் அபிஷேக் என தெரியவந்துள்ளது. அவருக்கு அடுத்து சின்ன பொண்ணு குறைந்த புள்ளிகளை பெற்றுள்ளார்.

bigboss voting
bigboss voting