யார் படம் ஓடுனாலும் ஹீரோ அங்க நாங்க தான் – வசூலில் அடித்து நொறுக்கும் வலிமை – இதுவரை அள்ளிய தொகை எவ்வளவு தெரியுமா.?

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் அஜித்குமார் சமீபகாலமாக சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி வருவதால் ஆண் ரசிகர்களையும் தாண்டி பெண்களையும் பொதுமக்களையும் வெகுவாகக் கவர்ந்துவிடுகிறார் இதனால் இவர் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட் படங்களாக மாறுகின்றன.

அந்த வகையில் விசுவாசம் நேர்கொண்டபார்வை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அஜித் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு பின்பு வெளியான திரைப்படம் தான் வலிமை இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் எந்த குறையும் வைக்காமல் அடித்து நொறுக்குகிறது.

இதனால் படக்குழு ஒரு பக்கம் செம சந்தோஷத்தில் இருக்கிறது வலிமை திரைப்படம் தமிழில் தாண்டி கன்னடம் தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளிலும் இந்திய அளவில் வெளியானது. அங்கேயும் நல்ல வசூல் தான். வெளிநாட்டிலும் வலிமை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வலிமை திரைப்படம் முதல் வாரத்தில் மட்டுமே 193.41 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்தது இதன் மூலம் பல்வேறு நடிகர்களின் படங்களின் வசூலை அடித்து நொறுக்கியது. மேலும் படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது ஏனென்றால் எதிர்பார்க்காத ஒரு வசூலை வலிமை திரைப்படம் தற்போது செய்துள்ளதாக கூறியது.

இப்படி இருக்கின்ற நிலையில் இரண்டாவது வாரத்திலும் வலிமை படம் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்துதான் பார்க்க இருக்கிறோம் ஆதாரம் தற்போது கிடைத்துள்ளது. முதல்வாரத்தில் 193.9 ஒரு கோடி. இரண்டாவது வாரம் முதல் நாள் – 4.50 கோடி, இரண்டாவது நாள் – 4.73 கோடி, மூன்றாவது நாள் – 5.40 கோடி, நான்காவது நாள் – 6.12 கோடி, ஐந்தாவது நாள் – 1.47 கோடி, ஆறாவது நாள்  – 1.36 கோடி.

 

Leave a Comment

Exit mobile version