அமலாபால் நடித்த “மைனா” படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?

தமிழ் சினிமா உலகில் கிராமத்து கதைகள் உள்ள படங்கள் எப்பொழுதும் வெற்றிகளை அள்ளும் அந்த வகையில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்கள் மைனா மற்றும் கும்கி அதிலும் குறிப்பாக மைனா திரைப்படம் வேற லெவல் ஹிட் அடித்தது.

மைனா படத்தில் ஹீரோவாக விதார்த் மற்றும் ஹீரோயின்னாக அமலாபால், தம்பி ராமையா என பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர் இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது இந்த படத்திற்கு பிறகு விதார்த்துக்கும் சரி அமலா பாலுக்கும் சரி நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ஒரு நாளில் நடக்கும் விஷயத்தை படமாக எடுக்கப்பட்டது. இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படம் குறித்து ஒரு சூப்பர் தகவல்கள் வெளியாகி உள்ளது அதாவது மைனா படத்தில் ஹீரோவாக விதார்த் சூப்பராக நடித்திருப்பார். ஆனால் உண்மையில் அந்த கதாபாத்திரத்தில் வேறு ஒருவர்தான் நடிக்க இருந்தாராம் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

கழுகு, கழுகு 2, யாமிருக்க பயமேன், மாரி 2 போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்த கிருஷ்ணா தானாம். இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தாராம். இயக்குனர் பிரபு சாலமனிடம் கிருஷ்ணா இந்த படத்தின் கதையை சொல்லுங்கள் அப்பொழுது தான் என்னை தயார்படுத்திக் கொள்வேன் என கிருஷ்ணா கூறியுள்ளார் இது பிரபு சாலமனுக்கு பிடிக்காமல் போக அதன்பின் இயக்குனர் பிரபு சாலமன் நடிகர் விதார்தத்தை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தாராம்.

இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் கிருஷ்ணா வெளிப்படையாக கூறினார். இதை அறிந்த ரசிகர்கள் இப்படி ஒரு பிளாக்பஸ்டர் படத்தை தவறவிட்டீர்களே எனக் கூறி வருத்தப்பட்டு வருகின்றனர். மேலும் இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment