மலர் டீச்சராக “பிரேமம்” படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா.? அப்புறம் சாய் பல்லவிக்கு வாய்ப்பு கிடைத்ததாம்.

premam
premam

சிறப்பான கதை களம் கொண்ட படங்களுக்கு பிரமோஷன் தேவையில்லை என்று நாம் அடித்து கூறிவிடலாம் ஏனென்றால் மலையாள சினிமாவில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் நடித்த திரைப்படம் பிரேமம் .

இந்த திரைப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடித்து அசத்தினார். இந்த திரைப்படம் மலையாளத்தில் வெளியாகி இருந்தாலும் பிற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது அங்கேயும் இந்த திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதிலும் இந்த மூன்று கதாநாயகிகள் ஆன மடோனா செபஸ்டியன், அனுபமா பரமேஸ்வரி மற்றும் சாய்பல்லவி ஆகியோர்கள் இந்த படத்திற்கு பிறகு பல படைப்புகளை தென்னிந்திய சினிமா உலகில் கைப்பற்றி நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் நடித்த ஒவ்வொருவருக்கும் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்தது. இப்படியிருக்க பிரேமம் திரைப்படத்தில் இருந்து ஒரு சுவாரசியத் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது .அதாவது படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஆரம்பத்தில் சிறப்பான நடிகர் நடிகைகளை தேடிக் கொண்டிருந்தாராம்.

அந்த வகையில் சாய் பல்லவி நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் முதன் முதலில் அவருக்கு பதிலாக நடிக்க இருந்தவர் நடிகை அசின் தான் ஆனால் சில காரணங்களால் அவர் இந்த திரைப்படத்தை தவிர்க்கவே பின் அந்த கதாபாத்திரம் சாய்பல்லவிக்கு கைமாறியது. எது எப்படியோ சாய்பல்லவி இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய ஒரு உயரத்தை இயற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

asin
asin