மைனா திரைப்படத்தில் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது இவரா.?

என்னதான் தற்போது ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கினாலும் நடிகை அமலாபால் தமிழில் மைனா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே  தனது முகத்தை பதிய வைத்து அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் மைனா இந்த திரைப்படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடிக்க மற்றும் இந்த  திரைப்படத்தில் விதார்த்,தம்பி ராமையா,பாஸ்கர் போன்ற பல சினிமா பிரபலங்கள் நடித்து இருந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாக அமைந்தது அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்தது தான் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் தம்பி ராமையா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் வேறு ஒரு நடிகர் நடிக்க இருந்தார் என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இவர் நடித்த ராம்யா கதாபாத்திரத்தில் நடிகர் சார்லி தான் முதலில் நடிக்க இருந்தாராம் ஒரு சில காரணங்கள் குறித்து அப்பொழுது அவரால் நடிக்க முடியாமல் ஆகிவிட்டதாம்.

மேலும் இவர் நடிக்க இருந்த கதாபாத்திரத்தை தான் தம்பி ராமையா நடித்து அசத்தியிருப்பார் இதனையடுத்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் சார்லி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தாரா நம்பவே முடியவில்லை.

mynaa3
mynaa3

என்று கூறி வருவது மட்டுமல்லாமல் பலரும் இவர் நடிக்கவில்லை என்றாலும் இந்த திரைப்படம் நன்றாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று விட்டது என்று கூறி வருகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இந்த தகவலை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a Comment