ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவான 3 படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த ஹீரோயின் இவரா.? கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்ட டாப் நடிகை.

நடிகர் தனுஷ் சமீபகாலமாக ஆக்சன் கலந்த திரைப்படங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டு வருகிறார் ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய பட்டாளத்தை அப்போதே உருவாக்கி இருந்தார்.

அதற்கு காரணம் காதல் சென்டிமென்ட் காட்சிகளில் தனுஷின் நடிப்பு அபாரமாக இருந்தது வந்தன. அந்த வகையில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 3 இந்த திரைப்படத்தில் தனுஷின் மாறுபட்ட கதாபாத்திரம் வெளிப்பட்டது காதல் மற்றும் பாசம் என எல்லாவற்றிலும் தனது அசாதாரணமான பங்களிப்பை கொடுத்து அசத்தி இருப்பார்.

இந்த படத்தில் இடம்பெற்ற ஒய்திஸ் கொலவெறி என்ற பாடலும் வேற லெவலில் ஹிட்டடித்தது இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து சிவகார்த்திகேயன், சுருதிஹாசன், பிரபு போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருப்பார்கள் ஆனால் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக முதன் முதலில் நடிகர் தேர்வானது நடிகை சுருதிஹாசன் இல்லையாம்.

அவருக்கு பதிலாக கமிட்டானவர் நடிகை அமலா பால் தானாம் ஆனால் அப்போது அவரின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் இந்த படத்திலிருந்து அமலா பால் நடிக்க முடியாமல் போனது அதன்பிறகு ஸ்ருதிஹாசனை தேர்வு செய்தது படக்குழு.

இந்த திரைப்படத்தில் அமலாபால் நடித்து இருந்தால் தற்போது தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றி சிறப்பாக ஓடிக் கொண்டிருப்பார் என்பது ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகிறது.

Leave a Comment