சுந்தரா டிராவல்ஸ் இரண்டாம் பாகத்தில் முரளியின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது இவரா.. இவர் அதுக்கு சுத்தப்பட்டு வருவாரா.! அதிர்ச்சியாகவும் ரசிகர்கள்.

0

சமீப காலமாக சினிமா உலகில் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் படங்கள் என்னுமோ  ஆக்ஷன் திரைப்படங்கள் தான் ஆனால் அந்த நிலைமையை  உடைக்க முடியும் என்றால் காமெடி திரைப்படங்கள் மட்டுமே அதை உடைத்தெறிய முடியும் என பலரும் கூறுகின்றனர்.

மேலும் காமெடி திரைப்படங்களில் எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வரும் அந்த வகையில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் இப்பொழுதும் மக்களுக்கு பிடித்த திரைப்படமாக இருந்து வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க காமெடியை மையாமாக வந்து உருவாகியது. இந்த திரைப் படத்திற்கு கூடுதல் பலமாக முரளியின் எதார்த்த நடிப்போ  படத்தின் தூணாக இருந்தது.

மேலும் காமெடிக்கு பேர்போன வைகை புயல் வடிவேலு நடிப்பு காமெடியில் பின்னி பெடல் அடித்ததால் சுந்தரா டிராவல்ஸ் படத்தை இன்றளவும் கொண்டாடி வருகின்றனர் மேலும் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

சுந்தரா டிராவல்ஸ் இரண்டாம் பாகத்தில் முரளி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளவர் நடிகர் கருணாகரன் மற்றும் வடிவேலு கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர்கள் ஏற்கனவே பல்வேறு திரைப்படங்களில் ஒன்றாக சேர்ந்து பணியாற்றிய நிலையில்  சுந்தரா டிராவல்ஸ் இரண்டாம் பாகத்தில் நடித்தால் இந்த படம் வெற்றி பெறுமா என்பது தற்போது கேள்விக்குறிதான் என ஒரு பக்கத்து ரசிகர்கள் கூறி வருகின்றனர் ஏனென்றால் சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வடிவேலு, முரளி நடிப்பு வேற லேவலில் இருந்தது அதை பூர்த்தி செய்யும் அளவிற்கு நடிப்பார்களா.. கேள்வி குறியாகவே இருக்கிறது.

மேலும்  இரண்டாம் பாகமாக உருவாவும் எந்த படமும் சொல்லி கொள்ளும் அளவிற்கு பெருமளவு வெற்றியை பெறாததால் இந்த படமும் அதுபோன்ற ஒரு தோல்வியை சந்தித்தால் நன்றாக இருக்காது என ரசிகர்கள் ஒரு பக்கம் கூறி வருகின்றனர். மேலும் இந்த திரைப்படத்தை கைவிடுமாறும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.