முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான “800” படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக ஹீரோவாக நடிக்கப் போவது யார் தெரியுமா.? வெளிவந்த சுவாரஸ்ய தகவல்.

சினிமா உலகில் சமீபகாலமாக வரலாற்றில் சாதனை படைத்த பிரபலங்களின் வரலாற்றை மையமாக வைத்தே படமாக எடுக்கப்பட்டு வருகிறது இதுவரை பல்வேறு பிரபலங்களின் வாழ்க்கையில் படங்கள் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கி உள்ளது.

அதிலும் குறிப்பாக அண்மைகாலமாக கிரிக்கெட்டில் சாதித்தவர்களின் படங்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. சச்சின், தோனி ஆகியவர்களை தொடர்ந்து அண்மையில் கூட கபில் தேவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 83 படம் வெளிவந்து வசூல் சாதனை புரிந்து வருகிறது.

இந்த நிலையில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க இருந்தது. n அந்தப் படத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய்சேதுபதி நடிக்க இருந்தார் அந்த படத்திற்கு கூட 800 என பெயர் வைக்கப்பட்டது.

ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக முத்தையா முரளிதரனின் இந்த வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்க முடியாமல் போனது மேலும் விஜய் சேதுபதியும் இந்த படத்தில் நடிக்க முடியாது என கூறவே படம் அப்போது கைவிடப்பட்டது. 83 படக்குழு இந்த படத்தை எடுத்தே தீருவேன் என்பது போல நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இந்த படத்தை எடுக்க முடிவு எடுத்துள்ளது.

விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இருந்த இந்த படத்தில்  ஹீரோவாக நடிக்க போவது யார் தெரியுமா என்பது குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது அதாவது பிரிட்டன் நடிகர் தேவ் படேல் என்பவர் நடிக்க உள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.

 

Leave a Comment