ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நான் தான் முதலில் நடிக்க வேண்டும் என தற்பொழுது கூறும் பிரபல நடிகர்.? ஐயோ பாவும் வட போச்சே என கூறும் ரசிகர்கள்.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை இந்த திரைப்படத்தில் ஆர்யாவின் நடிப்பை பார்த்துவிட்டு பாராட்டாதவர்களே இல்லை என்ற அளவிற்கு ஆர்யா இந்த திரைப்படத்தில் மிகவும்  அற்புதமாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் என்றுதான் கூறவேண்டும்.

ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படங்களில் இந்த திரைப்படம் அவருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது பொதுவாகவே ஆர்யாவின் திரைப் படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவது உண்டு இந்த திரைப்படத்தில் இவர் குத்துச் சண்டை வீரர் போலவே உடம்பை கட்டுக்கோப்பாக வைத்ததால் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகிவிட்டது.

மேலும் பா ரஞ்சித் இயக்கத்தில் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடையே தனது முகத்தை பதிய வைத்த நடிகர் என்றால் அது நடிகர் தினேஷ் தான் இவர் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் இடையே தலை காட்டினார் என்பது குறிப்பிடதக்கது இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இவர் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை குறித்து ஒரு தகவலை கூறியுள்ளாராம்.

அதில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நான்தான் நடிக்க வேண்டியது அட்டகத்தி படத்திற்கு பிறகு நான் தான் இந்த திரைப்படத்திலும் நடிக்க வேண்டும் அதுமட்டுமல்லாமல் மெட்ராஸ் திரைப்படத்திற்கு முன்பே நாங்கள் இந்தத் திரைப்படத்திற்காக தான் ரெடியானோம் ஆனால் எனக்கும் ரஞ்சித் அவர்களுக்கும் இயற்கையாகவே அமையவில்லை இதனால் இந்த திரைப் படத்தில் நான் நடிக்க முடியாமல் போய்விட்டது என உருக்கத்துடன் கூறினாராம்.

aarya

மேலும் அவர் இந்த திரைப்படம் வெளியான பொழுது நான் பார்த்துவிட்டு இந்த திரைப்படத்தில் நானே நடித்து இருக்கலாம் என யோசித்தேன் என கூறினாராம் இதையடுத்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் ஆர்யா மட்டும்தான் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியும் ஏனென்றால் அவருக்கு தான் கட்டுக்கோப்பான உடம்பு இருந்தது தினேஷ் நடித்திருந்தால் படம் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்குமா என்பது சந்தேகம் தான் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version