நடிகர் தனுஷ் இளம் வயதில் இருந்து இப்போது வரையிலும் தமிழ் சினிமாவில் ரொம்ப கஷ்டப்பட்டு படிப்படியாக தனது திறமையை வெளிக்காட்டி தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். சினிமா உலகில் வெற்றி கனியை பெற்று வரும் நடிகர் தனுஷுக்கு தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைப்பதால் இவரது சினிமா பயணம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு படங்களில் நடித்து அசத்தி வருகிறார் சினிமா துறையில் வெற்றியை கண்டு வந்தாலும் நிஜ வாழ்க்கையில் தற்போது சறுக்கல்களை காணத் தொடங்கி உள்ளார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து பின் திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் இரு மகன்கள் உள்ளனர்.
18 வருடங்களாக சிறப்பாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த மாதம் நாங்கள் விவாகரத்து பெற போகிறோம் என அறிவித்த செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் பூதாகரமாக வெடித்தது இவர்களை சேர்த்து வைக்க பல பிரபலங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார் ரஜினியும் அதில் ஈடுபட்டார் ஆனால் இருவரும் ஒத்து வராமல் போனதால் தற்போது செம சோகத்தில் இருக்கிறார் ரஜினி.
இப்படி இருந்தாலும் ரஜினியின் சினிமா பயணம் விடக்கூடாது என்பதற்காக மறுபக்கம் அவர் சினிமாவில் தலை காட்டத் தொடங்கியுள்ளார் அந்த வகையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதலில் பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் என்பவர் தான் இயக்க இருந்தாராம்.
தனுஷ் மூலமாகத் தான் அந்த இயக்குனர் ரஜினியை சந்தித்து உள்ளதாக கூறப்படுகிறது இப்படி இருந்த நிலையில் தற்போது தனுஷ் மீது கோபத்தில் இருக்கும் ரஜினி உடனடியாக ஆனந்த் எல் ராய் தனது படத்தை இயக்க வேண்டாம் என கூறிவிட்டு தனது அடுத்த இயக்குனரான நெல்சன் திலீப் குமாருக்கு அந்த வாய்ப்பை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.