விஜய் நடிக்கவிருக்கும் 66 வது திரைப்படத்திற்கு முதல் பாடலை பாட இருக்கும் விஜய் டிவி பிரபலம்.! யார் தெரியுமா.?

தளபதி விஜய் கடந்த சில படங்கள் நாம் எதிர்பார்ப்பதைவிட பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து அதோடுமட்டுமல்லாமல் வசூல் வேட்டையும் நடத்தி வருகின்றன அதனால் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு நடிகராக தற்போது அவர் மாறியுள்ளார். இப்போ நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் “பீஸ்ட்” படத்தில் நடித்து வந்தார்.

திரைப்படத்தின் ஷூட்டிங்கை வெற்றிகரமாக முடித்துவிட்டு தற்போது தனது 66வது திரைப்படத்தில் நடிக்க ரெடியாக  இருக்கிறார். தளபதி விஜயின் 66 ஆவது திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி என்பவர் இயக்கியிருக்கிறார் மிக பிரமாண்ட பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்க இருக்கிறார்.

தளபதி விஜய் தற்போது சிறிது ஓய்வு எடுத்து விட்டு அடுத்த வருடம் மார்ச் மாதம் தனது 66 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அதற்கு முன்பாக இவர் 65-வது திரைப்படத்திலும் தனது டப்பிங் வேலைகளை முடிக்க ரெடியாக இருப்பதாகவும் ஒருபக்கம் தகவல்கள் வெளிவருகின்றன.

இந்த நிலையில் விஜய்யின் 66 வது திரைப்படத்துக்கு தமன் இசையமைக்க உள்ளார் என படக்குழு ஏற்கனவே சொல்லி விட்டது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து உள்ளது இந்த நிலையில் முதல் பாடல் பற்றிய ஒரு தகவல் ஒன்றும் இணையதள பக்கத்தில் உலா வருகிறது.

அதாவது விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி தான் முதல் பாடலை பாட உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. தளபதி ரசிகர்களும் இணையதள பக்கத்தில் இந்த செய்தியை பரப்பி கொண்டாடி வருகின்றனர்.

Leave a Comment