சினிமா உலகில் ஒரு ஹீரோ ஹீரோயினை வைத்து படத்தை எடுப்பதே மிகப்பெரிய விஷயம் ஆனால் ஒரு படத்தில் இரண்டு ஹீரோ இரண்டு கதாநாயகியை வைத்து படத்தை எடுப்பது மிகப்பெரிய விஷயம் தான். அந்த வகையில் 2011ம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் நடிகர் சிம்பு, பரத் ஆகியவர்களை வைத்து இயக்கி வெற்றி கண்ட திரைப்படம் தான் வானம்.
இந்த திரைப்படம் ஏழை பணக்காரர் களின் நிலைமை என்ன என்பதை புரியவைக்கும் வகையில் எடுத்து இருந்தது மேலும் காதல், ஒரு மனிதன் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த படமும் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கும்.
இந்த படத்தில் காமெடி ரோலில்சந்தானம், விடிவி கணேஷ் ஆகியோர் பின்னி பெடல் எடுத்து இருப்பார்கள். மேலும் இந்த படத்தில் சிம்பு பரத் மற்றும் நடிகைகள் பலரும் இணைந்து தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்த படத்தின் ரீமேக் தற்போது உருவாகி வருகிறது இந்த நிலையில் படகு ஒரு சுவாரஸ்யமான தகவலை கூறி உள்ளது இந்த இப்படத்தில் முதன் முதலில் சிம்புவுக்கு முன்பாக கோ, யான் போன்ற படங்களில் நடித்த ஜீவா தான் நடிக்க வைக்க முடிவு செய்தனர்.
மேலும் பரத் வேடத்தில் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மஞ்சு மோகன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.
இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வேகம் எடுத்துள்ளது.