குக் வித் கோமாளி சீசன் 3 – யில் கலந்து கொள்ள இருக்கும் மூன்று பிரபலங்கள் யார் யார் தெரியுமா.?

சின்னத்திரை தொலைக்காட்சிகளில் வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு நாட்களில்  பொழுதுபோக்கிற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் டிவி நிகழ்ச்சிகள் என்றால் சொல்லவே தேவையில்லை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பிப் பார்க்கக் கூடிய காமெடி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

அந்த வகையில் ஹேட்ரசே இல்லாத நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி முதல் சீசன் சற்று வித்தியாசமாக சமையல் நிகழ்ச்சிகளில் காமெடி ஜாம்பவான்களை இறக்கி சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.  பின்பு இந்த நிகழ்ச்சி யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு ரீச் ஆகியுள்ளது அதற்கு முக்கிய காரணம்.

அதில் உள்ள காமெடி பிரபலங்களான பாலா, புகழ், சிவாங்கி, மணிமேகலை போன்றவர்கள் கோமாளியாக சேட்டை செய்து வருவது மக்கள் பலரையும் ரசிக்க வைத்துள்ளது. இதனையடுத்து இந்த நிகழ்ச்சி சீசன் சீசனாக நடந்து வருகிறது. அந்த வகையில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி  தொடங்க உள்ளதாக தேதி குறிப்பிடாமல் புரோமோ ஒன்று வெளியாகியது.

மேலும் கடந்த இரண்டு சீசன்களிலும் கலந்துகொண்ட புகழ் இந்த சீசனில் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. ஏனெனில் அவர் தற்போது பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலரும் தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் நடிகைகளாக திகழ்ந்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதில் நடிகை ஊர்வசி, வீஜே அர்ச்சனா, சர்வைவர் விஜயலட்சுமி போன்றவர்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. மேலும் குக் வித் கோமாளி சீசன் 3 ஷூட்டிங் தொடங்கி உள்ளது. மேலும் செட் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

Leave a Comment