விஜய் 66 திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் யார் தெரியுமா.? முழு விவரம் இதோ.

தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிக்கு பிறகு பல ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் தளபதி விஜய்.

இவர் கடைசியாக நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது அந்தவகையில் மாஸ்டர் திரைப்படமும் இதுவரை 250 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இதை தொடர்ந்து இளம் தலைமுறை இயக்குனரான நெல்சன் திலிப்குமார் என்பவருக்கு தனது அடுத்த படத்தை கொடுத்துள்ளார் இந்த திரைப்படமும் நிச்சயம் வேறொரு ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் நெல்சன் திலிப்குமார் இயக்கிய படங்கள் ஒவ்வொன்றும் தமிழ் சினிமாவில் சிறந்த இடத்தை பிடித்துள்ளது அதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் எகிறி உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்க உள்ள நிலையில்.. விஜய்யின் அடுத்த படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதாவது தளபதி 66 வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் மீண்டும் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த படத்தை குறைந்த பட்ஜெட்டில் எடுக்க தேனாண்டாள் பிலிம்ஸ் முடிவு செய்துள்ளது .

தளபதி 66 படத்தை அதுவே தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment