கொம்பன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் யார் தெரியுமா அது.?

வெள்ளித்திரையில் வாரிசு நடிகராக களமிறங்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை புதிதாக உருவாக்கிக் கொண்டவர் தான் கார்த்தி நடிகர் சிவகுமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவர்களும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டவர்கள்.

அதிலும் குறிப்பாக கார்த்தி தனது ஆரம்பகால கட்டத்தில் இருந்து தற்போது வரை நிறைய திரைப்படங்களில் தனது அயராத உழைப்பை காட்டி எப்படியோ முட்டி மோதி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் புதிதாக உருவாக்கிக் கொண்டார் இவரது நடிப்பில் தற்போது ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது அவ்வாறு இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் பல கோடி வசூல் செய்துவிட்டது.

அந்த வகையில் கார்த்தி தற்பொழுது பொன்னியின் செல்வன் என்ற திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கார்த்தியின் திரைப்பயணத்தில் அவருக்கு ஒரு மயில் கல்லாக அமைந்த திரைப்படம் தான் கொம்பன் இந்த திரைப்படத்தில் கிராமத்தில் எப்படி நடக்குமோ அப்படியே பிசிறு தட்டாமல் கார்த்தி இதில் நடித்திருப்பார்.

மேலும் இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமிமேனன்,ராஜ்கிரண் தம்பி ராமையா,கோவை சரளா போன்ற ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகர்கள்,நடிகைகள் நடித்ததால் படம் சூப்பர் ஹிட்டாகி விட்டது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தைப் பற்றி தற்பொழுது ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீரியலாக அமைந்து வருவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இதில் ஒரு பிரபலம் கொம்பன் திரைப்படத்தில் நடித்துள்ளார் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் கொம்பன் திரைப்படத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகர் ஸ்டாலின் நடித்ததாக இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் கொம்பன் திரைப்படத்தை நாங்கள் இப்போது பார்க்க போகிறோம் என கூறி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version