சிவாஜி, கமலுக்கு பிறகு அடுத்தபடியாக அதிக கெட்டப் போட்டு நடித்த தமிழ் நடிகரின் யார் தெரியுமா.? சொன்னா நம்ப மாட்டீங்க..

சினிமா உலகில் அனைவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள் என்பது உண்மைதான் ஆனால் ஒரு சிலரோ தொடர்ந்து அனைத்து படங்களிலும் வித்தியாசமான கெட்டப்புகளைபோட்டு நடித்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க கடினமாக நடிப்பவர்கள் வெகுசிலரே..

அந்த வகையில் சிவாஜி, கமலை தொடர்ந்து பல்வேறு வேடங்களில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் ஒரு நடிகர் அவர் யார் தெரியுமா.. தமிழ் சினிமாவில் அதிக கெட்டப்புகளை போட்ட நடிகர்களில் முதன்மையானவர் சிவாஜி கணேசன் ஆம் இவர் நவராத்திரி படத்தில் மட்டுமே 9 வேடங்களில் நடித்திருப்பார்.

அவரை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நான்கு வேடங்கள் தசாவதாரம் பத்து வேடங்கள் என பல்வேறு படங்களில் இதுபோன்ற வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் மேலும் முகத்தோற்றத்தில் மட்டுமல்லாது ஆடைகளையும் வித்தியாசமாக போட்டு நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு பிரபலங்களை தவிர்த்து அடுத்ததாக அதிக கெட்டப்புகளை போட்டு வர் புரட்சித் தமிழன் சத்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு ஞாபகத்தில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு சில படங்களை சொல்லலாம் அந்த வகையில் பாகுபாலியில் கட்டப்பா, அமைதிப் படையில் அரசியல்வாதி, நூறாவது நாள் படத்தில் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரம்  போன்ற பல்வேறு படங்களில் தனது வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து அசத்தியுள்ளார்.

இதுவரை கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் சத்யராஜ் நடித்துள்ளார் கமலுக்கு அடுத்தபடியாக இதுவரை 200க்கும் மேற்பட்ட வித்தியாசமான வேடங்களில் சத்யராஜ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கியதிலிருந்து இப்போதுவரையிலும் கிடைக்கின்ற எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து அசத்தியவர் சத்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது இவரது நடிப்பு மற்றும் கெட்டப் ஆகியவை சிறப்பாக இருந்த காரணத்தினாலேயே இன்றும் பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்த வண்ணமே இருக்கிறது.

Leave a Comment