“பாரதிகண்ணம்மா” சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் குறைத்த சம்பளம் வாங்கும் பிரபலம் யார் தெரியுமா.? வெளியான தகவல்.

வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரை விதவிதமான நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை வழங்கி வருகிறது. அதனால் மக்கள் பெரிதும் சின்னத்திரையையே விரும்புகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் டிவி தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் ஃப்வரேட் சீரியல்கள் ஆகும்.

இந்த சேனலில் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடரை இயக்கி வரும் பிரவீன் பென்ட் மிகவும் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் எடுத்து வருகிறார். இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளன.

இதில் சில நாட்களாக கண்ணம்மாவிடம் மறைத்து வைக்கப்பட்ட அவளது மற்றொரு குழந்தை பற்றிய உண்மை தெரியவந்துள்ளது. இதுபோல் கதையில் மறைத்து வைக்கப்பட்ட சீக்ரெட் எல்லாம் ஒவ்வொன்றாக வெளிவருவதால் சீரியல் முடிவடைய உள்ளதா என மக்கள் எண்ணி வருகின்றனர்.

இந்த நிலையில் பாரதிகண்ணம்மா தொடரில் நடிக்கும் பிரபலங்களின் ஒருநாள் சம்பளம் விவரம் குறித்து சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதனைக் கண்டு ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்தவகையில் பாரதிகண்ணம்மா சீரியலில் கதா நாயகன் பாரதி ஒரு நாளைக்கு 20 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார்.

கதாநாயகி கண்ணம்மா 20 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார். சௌந்தர்யா ஒரு நாளைக்கு 15,000 சம்பளமாக பெறுகிறார். பாரதியின் அப்பா வேணும் ஒரு நாளைக்கு 12 பெறுகிறார். பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து வரும் வெண்பா 10,000 சம்பளமாக பெறுகிறார். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெண்பாவிற்கு மற்ற பிரபலங்களை விட கம்மியான சம்பளம் இருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுவும் தற்போது அவள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போதும் கூட தொடர்ந்து நடித்து வருகிறார். இப்படிப்பட்ட வெண்பாவிற்கு மற்ற நடிகர்களை விட குறைவான சம்பளம் தருவது நியாயமா என ரசிகர்கள் இணையதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Comment