சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தனது 69வது திரைப் படத்தில் நடிப்பாரா நடிக்க மாட்டாரா என்ற ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது அதற்கு ஒருவழியாக முடிவு கட்டும் வகையில் தன்னை ஃபிட்டாக வைத்துக் கொண்டு பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார்.
அப்படி சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தை தற்பொழுது பெற்றோருக்கும் இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமாரை வரவைத்து கதை கேட்டுள்ளார் அந்த கதையும் ரஜினிக்கு பிடித்துப்போகவே ஒரு கட்டத்தில் அப்புறம் பார்க்கலாம் என கூறினார் தற்போது அதற்கு ஓகே சொல்லி உள்ளதால் ரஜினியின் நூற்று அறுபத்து ஒன்பதாவது திரைப்படத்தை இயக்க ரெடி ஆகி உள்ளார்.
இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது என கூறப்படுகிறது. நெல்சன் பீஸ்ட் திரைப்படத்தை சிறப்பாக முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்ததாக ரஜினியை வைத்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 169 திரைப்படத்தை எடுக்க இருக்கிறார் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
படத்தின் சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சில முக்கிய பிரபலங்களை தட்டிதூக்கி வருகிறது படக்குழு அந்த வகையில் அடுத்ததாக ரஜினியின் 169 திரைப்படத்திற்காக யாரை நாயகியாக தேர்வு செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறதாம். அந்த லிஸ்டில் முதலாவதாக ரஜினிக்கு ஜோடியாக பார்க்கப்படுவது உலக அழகியும் பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யாராய் நடிக்க வைக்க..
முயற்சி செய்வதாக தெரிய வருகிறது அவர் ஓகே சொல்லும் படத்தில் ரஜினியுடன் நடிக்க வைத்து மீண்டும் ஒரு ஹிட் படத்தைக் கொடுக்கும் என தெரியவருகிறது ரஜினியும், ஐஸ்வர்யா ராயும் ஏற்கனவே இணைந்து எந்திரன் திரைப்படத்தில் நடித்தனர் அந்த திரைப்படம் எதிர்பார்க்காத அளவுக்கு இமாலய வெற்றியை கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.