தளபதி 65 திரைப்படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர் யார் தெரியுமா அது.? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க.!

தனது நடிப்பு திறமையை அபூர்வமாக ரசிகர்களுக்கு வெளிகாட்டி தமிழகத்தில் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கும் நடிகர்தான் இளைய தளபதி விஜய் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்ப்பு தந்தது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் சுமார் 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

இதனையடுத்து தளபதி 65 திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் கை கோர்த்துள்ளார்.மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெட்டேக் நடிக்க உள்ளார் இந்தத் திரைப்படத்திற்காக அனிரூத் இசையமைத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில்தான் இந்த திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது  மேலும் படப்பிடிப்பு அடுத்த மாதம் 5-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது இந்நிலையில் இந்த திரைப்படத்தில் ஒரு பிரபல காமெடி நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வைரலாகி வருகிறது.

ஆம் அந்த காமெடி நடிகர் யார் என்று கேட்டால் யோகி பாபு தான் இவர் தளபதி 65 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் இதை உறுதிப்படுத்தியுள்ளாராம் இது குறித்து அவர் தளபதி 65 திரைப்படம் மிகவும் அட்டகாசமாக இருக்கும் செம ஜாலியாக இருக்கும் என தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

vijay
vijay

இதனையடுத்து இந்த தகவல் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment