பிக்பாஸ் சீசன் 5 -ல் வைல்டு கார்டு மூலம் உள்ளே அடியெடுத்து வைக்க போகும் பிரபலம் யார் தெரியுமா.? கசிந்த தகவல்.

0

தமிழில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. இதனை சீசன் சீசனாக நடத்தி வருகிறது விஜய் டிவி தொலைக்காட்சி . அந்த வகையில் தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்த சீசனை தொடர்ந்து 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 5வது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

கமலஹாசன் தற்போது வெள்ளித்திரையில் அதிக படங்களில் ஈடுபடவில்லை. அரசியல் மற்றும் சின்னத்திரை என அனைத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் 10 பெண் போட்டியாளர்கள் 7 ஆண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

திடீரென திருநங்கை நமிதா மாரிமுத்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறினார். முதல்வாரத்தில் எலிமினேஷன் இல்லாததால் தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர். பிக்பாஸில் முதல் போட்டியாக கடந்து வந்த பாதை என்ற டாஸ்கில் அனைத்து போட்டியாளர்களும் அவர்களது வாழ்க்கையில் நடந்த சில முக்கிய சம்பவங்களை பற்றி கூறி வருகின்றனர்.

நேற்று தலைவர் பதவிக்கான போட்டியும் நடைபெற்றது அதில் இந்த வார கேப்டனாக தாமரைச்செல்வி தேர்ந்தெடுக்கப்பட் டார். வழக்கமாக பிக்பாஸ் வீட்டில் நாற்பது, ஐம்பது நாட்கள் கழித்து தான் வைல்டு கார்டு என்ட்ரி நடைபெறும். ஆனால் தற்பொழுது வருகிற அக்டோபர் 16ஆம் தேதி நடிகை ஷாலு ஷம்மு வைல்டு கார்டு என்ட்ரி ஆக பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

shalu shammu
shalu shammu

இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல், இருட்டு குத்து போன்ற படங்களில் நடித்து வந்தவர். அதுபோக அவருக்கு பெரிதும் பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை. அதனால் இன்ஸ்டாவே கதி என கடந்தார். இவர் விதவிதமான போட்டோ ஷுட் நடத்தி கவர்ச்சியான உடையில் புகைப்படங்களை வெளியிடுவார். அதனால் ரசிகர்கள் பலரும் அவரைப் பின்பற்றத் தொடங்கினார்கள். தற்போது இவர் பிக்பாஸ் வீட்டிற்கு என்ட்ரி ஆக இருப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றன.