முதல் படத்திலேயே “ஹீரோவாக” நடிக்க போகும் பிக்பாஸ் சீசன் – 4 பிரபலம் யார் அது தெரியுமா.? படத்தை தயரிக்க போறது இவர் தானாம் – வெளியான புகைப்படம்.

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக மாடல் அழகிகளும், சின்னத்திரையில் சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி மக்களை கவர்ந்த பிரபலங்கள் பலரும் தற்போது வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து சிறப்பாக பயணிக்கின்றனர்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன், சந்தானம், வாணி போஜன், DD, திவ்யா துரைசாமி, பிரியா பவானி சங்கர், ரியோ, மாகாபா, அர்ச்சனா போன்ற பலர் தற்போது வெள்ளித்திரையில் அடி எடுத்து வைத்து வெற்றியை கண்டு வருகின்றனர். அதுபோல தற்போது விஜய் டிவி யில் மிக சிறப்பாக நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இருந்தும் பல பேர் காலடி எடுத்து வைத்துள்ளனர்.

அந்த வகையில் ஷிவானி நாராயணனை தொடர்ந்து தற்போது ஒரு பிரபலம் வெள்ளித்திரையில் ஹீரோவாக அடி எடுத்து வைக்க இருக்கிறாராம் பிக் பாஸ் சீசன் 4 – ல் நடிகர் ஆரியை எதிர்த்து சண்டை போட்டுக் கொண்டிருந்த மாடலிங் துறையில் பிரபலமான பாலாஜி முருகதாஸ் தான் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இவர் நடிக்க போகும் திரைப்படத்தை லிப்ரா ரவிச்சந்திரன் தயாரிக்க உள்ளாராம். இப்படத்தில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதை உறுதிப்படுத்தும் விதமாக ரவிச்சந்திரனுடன் பாலாஜி முருகதாஸ் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையதள பக்கத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

இதை அறிந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

ravichandran and balaji murugadoss
ravichandran and balaji murugadoss

Leave a Comment