தளபதி 66 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க போவது யார் தெரியுமா.? ஆனா லிஸ்ட் இத்தனை நடிகைகள் இருக்காங்க.. படக்குழு யாரை தேர்ந்தெடுக்கும்.?

0

ரஜினிக்கு பிறகு அதிக ஹிட் படங்களை கொடுத்து மற்றும் அதிக வசூல் வேட்டை நடத்தியது யார் என்றால் நாம் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம் தளபதி விஜய் தான் என்று இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் படம் கூட மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது.

தளபதி விஜய் தற்போது தனது 65வது திரைப்படமான “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும் என படத்தின் போஸ்டர் பார்க்கும் போதே தெரிகிறது இந்த படமும் விஜய்க்கு மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மிக தீவிரமாக எடுக்கபட்டு வருகிறது. கிட்டத்தட்ட படத்தையும் முடித்து விட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள வம்சி அவர்களுடன் தளபதி விஜய் இணைய உள்ளார்.

இதனால் 66வது திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. மேலும் வாஞ்சியின் பெரும்பாலான திரைப்படங்களை ராஜு என்பவர் தான் தயாரித்து உள்ளார். அதனால் இந்த படத்தையும் அவர்தான் தயாரிக்க உள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி 66 திரைப்படத்தின் நாயகிகள் யார் என்ற பேச்சு வார்த்தை தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் நாயகிகள் தேர்வில் தற்போது கீர்த்தி சுரேஷ் மற்றும் ராஷ்மிகா தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை மேலும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை எதையும் நாம் சரியாக சொல்லிவிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.