தமிழ் சினிமாவில் டாப் நடிகரான விஜய்யை வைத்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அதைத் தொடர்ந்து தற்போது தமிழை தாண்டி ஹிந்தி பக்கமும் அடி எடுத்து வைத்து மாஸ் கொடுத்து வருகிறார் இயக்குனர் அட்லீ.
ஹிந்தியில் முதல்படமே டாப் நடிகரான ஷாருக்கான்னுடன் கைகோர்த்து “ஜாவன்” என்ற தலைப்பில் ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்திற்கான ஷூட்டிங் தற்போது புனேவில் உள்ள மெட்ரோ ரையில் தண்டவாளத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த திரைப்படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து யோகி பாபு, நயன்தாரா, பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணா டகுபதி போன்றோர் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு இரட்டை கதாபாத்திரங்கள் மேலும் படம் முழுக்க முழுக்க ராணுவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் அந்த படத்திற்கான ஸ்டண்ட் காட்சிகள் மிக பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டு வருகிறது இந்த படத்தின் ஸ்டண்ட் பெயர்போன பயிற்சியாளரான yannick ben என்பவர் choreography செய்து வருகிறாராம்.
இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் இருக்கும் போதே மாஸ்ஸான ஸ்டண்ட் காட்சிகளை எடுத்து வந்த நிலையில் தற்போது திறமை வாய்ந்த பல முன்னணி பிரபலங்களை ஜாவன் படத்திற்காக இறக்கி உள்ளதால் படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் ஒவ்வொன்றும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
