மணிரத்னம் இயக்கி வெற்றி பெற்ற பம்பாய் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க.

0

தமிழ் மக்களுக்கு நிறைய ஹிட்டடித்த திரைப்படங்களை கொடுத்த இயக்குனர்களில் மிகவும் முக்கியமான இயக்குனராக வலம் வருபவர் மணிரத்னம் இவரது இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கும் என்பது நமக்கு தெரிந்ததுதான்.

அந்த வகையில் பார்த்தால் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா போன்ற பிரபலங்கள் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் தான் பம்பாய்  இந்ததிரைப் படத்தில் அரவிந்த்சாமி நடிப்பு ரசிகர்களால் தற்போது வரை பாராட்டப்பட்டு வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் பாடல் மக்களை அதிகம் கவர்ந்து விட்டது அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தில் இவரது முழு திறமையை வெளிப்படுத்தி இருப்பார் இந்நிலையில் இந்த திரைப்படத்தைப் பற்றி தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது அரவிந்த்சாமி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் பிரபல நடிகர் தான் நடிக்க வேண்டுமாம்.

யார் அந்த பிரபல நடிகர் என்று கேட்டால் வேறு யாருமில்லை விக்ரம் தான் இவர்தான் இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க வேண்டுமாம் ஒரு சில காரணங்கள் குறித்து இந்த திரைப்படத்தை விக்ரம் நழுவ விட்ட தாகவும் விக்ரம் பிஸியாக பல விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

vikram
vikram

விக்ரம் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தால் அவருக்கு சேது படத்திற்கு முன்பே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கும் என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாகும் இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வரும்போது விக்ரம் சின்னத்திரையில் பல விளம்பர படங்களில் நடித்து வந்துள்ளார்.இதனைத் தொடர்ந்து இந்த தகவலை அறிந்த விக்ரம் ரசிகர்கள் பலரும் விக்ரம் மற்றும் இந்ததிரைப் படத்தில் நடித்திருந்தால் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் என கூறியிருக்கிறார்கள்.