ஏகே 62-ல் அஜித்துடன் மோத போகும் வில்லன் யார்.? வெளியான புது அப்டேட்.

இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது நாம் இருக்கும் தெரிந்த ஒன்று. இந்த படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜயின் வாரிசு திரைப்படத்துடன் மோத இருக்கிறது. இதனை தொடர்ந்து விஜய் அஜித் ரசிகர்கள் இணையத்தில் போட்டி போட்டுக் கொண்டு வரும் நிலையில் படத்திலிருந்து அடுத்த அடுத்த அப்டேட்டுகள் வந்தொகொண்டே இருக்கிறது .

இதனை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் அஜித்தின் நியூ லுக்கை பார்த்து அனைவரையும் ஆச்சிரியபட வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தில் தன்னுடைய தோட்ரத்தை மாற்றி நடித்துள்ளார் நடிகர் அஜித்.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது ஏற்கனவே மங்காத்தா திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி உள்ள அஜித் துணிவு திரைப்படத்திலும் ஒரு மிரட்டு மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் துணிவு திரைப்படத்தின் ரிலீஸ் முடிந்து அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைகிறார். அதாவது ஏகே 62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் தான் இயக்க இருக்கிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இதுவரைக்கும் கமர்சியல் திரைப்படங்களை கொடுத்து வந்த விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து ஒரு ஹிட் படம் கொடுப்பாரா என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது இந்த நிலையில் ஏ கே 62 படத்திற்கான பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் ஏகே 62 திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி துவங்க உள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது மேலும் இந்த திரைப்படத்தில் அஜித் உடன் இணைந்து திரிஷா அவர்கள் நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது ஆனால் திரிஷாவிற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களுக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக திரிஷாவை ஏகே 62 படத்தில் இலிருந்து தூக்கி விட்டாராம் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

அதன்பிறகு ஏகே 62 திரைப்படத்தில் அஜித் உடன் யாருதான் கதாநாயகியாக நடிக்கிறார் என்று பல கேள்விகள் எழுந்தது அதையெல்லாம் ஒரே நொடியில் தவிடுபொடியாகிவிட்டார் இயக்குனர் விக்னேஷ் அதாவது ஏகே 62 படத்தில் அஜித்துடன் ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

காஜல் அகர்வால் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் கமலுடன் ஜோடியாக நடித்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று இதனை தொடர்ந்து அடுத்ததாக ஏ கே 62 திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஏ கே 62 திரைப்படத்தில் கேமியே ரோலில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் அவர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இதனை தொடர்ந்து ஏகே 62 இல் வில்லனாக நடிக்கப் போவது யார் என்ற செய்தி இன்னமும் வெளிவராத தகவலாக இருந்து வருகிறது அந்த வகையில் தற்போது ஏ கே 62 படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி நடிக்க கமிட்டாகி உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

ஏற்கனவே தனி ஒருவன் திரைப்படத்தில் யாருமே எதிர்பார்க்காத ஒரு வில்லனாக நடித்திருப்பார் நடிகர் அரவிந்த்சாமி. அதேபோல ஏகே 62 திரைப்படத்திலும் அஜித்திற்கு நிகரான வில்லனாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏ கே 62 திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் என்பதால் இந்த திரைப்படத்திலும் நடிகர் அஜித் அவர்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சமீபத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் ஏகே 62 திரைப்படத்தை தன்னுடைய பாணியில் இயக்க அஜித் முழு சித்திரம் கொடுத்து விட்டார் என்று கூறி அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறார் இருக்கிறார். ஆனால் ஏகே 62 திரைப்படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கிறார் என்று தகவல் தான் வந்திருக்கிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் யார் யார் என்று விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment