தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படமான ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார். படத்தின் சூட்டிங் வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது இது ரஜினிக்கு 169 ஆவது திரைப்படமாகும்.
இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன், சிவகார்த்திகேயன் மற்றும் பல பிரபலங்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது இந்த படத்தை நெல்சன் இயக்க உள்ளார் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது அந்த அளவிற்கு சிறந்த கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமே இருக்கிறது.
வருமான வரி தினத்தை முன்னிட்டு சென்னையில் அண்மையில் விழா ஒன்று நடத்தப்பட்டது அப்பொழுது தமிழகத்தில் அதிகம் வரி செலுத்தும் நடிகருக்கு பரிசு பொருட்களை கொடுத்து அழகு பார்த்தது அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதிக வரி செலுத்தும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
இதனை முன்னிட்டு ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அந்த பரிசு பொருட்களை ரஜினியின் மகள் சௌந்தர்யாவிடம் கொடுத்துள்ளார். அவர் அந்த விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது.