விஜய் 66 படத்தின் நாயகி இவரா.. ஒருவழியாக லாக் செய்த படக்குழு.? சம்பளம் மட்டுமே இவ்வளவு கோடியா..

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து ஒரு வழியாக வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக மக்கள் மற்றும் ரசிகர்களை கொண்டாட வைக்க படக்குழு அடுத்த அப்டேட் கொடுத்து வருகிறது.

இது வரை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்,  அரபி குத்து பாடல்  அதனை தொடர்ந்து ஒருசில போஸ்டர்களையும் வெளியிட்டு உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர்கள் அடுத்ததாக பீஸ்ட் பட ட்ரெய்லரை எதிர்நோக்கி இருக்கின்றனர் அதற்கான அப்டேட்டும் படக்குழு கொடுத்துள்ளது நீங்கள் எதிர்பார்ப்பது போல வெகு விரைவிலேயே படத்தின் டிரைலர் வெளிவரும் என கூறி உள்ளது.

பீஸ்ட் படம் வெளிவருவதற்கு முன்பாகவே அடுத்தடுத்த படத்தில் தளபதி விஜய் கமிட்டாகியது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் . அந்த வகையில் விஜய்யின் 66 திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தில் ராஜூ எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது விஜய் இந்த படத்தில் இணைவதற்கு முன்பாகவே கதைக்கு ஏற்றபடி நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் விஜய்க்கு ஜோடியாக முதலில் கீர்த்தி சுரேஷ் அல்லது ராஷ்மிகா மந்தனா இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இப்படி இருக்கின்ற நிலையில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகைகள் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் கீர்த்தி சனோன், திஷா பாட்னி இவர்களில் யாரேனும் ஒருவர் விஜய்க்கு ஜோடியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வந்த தகவலின் படி கீர்த்தி சனோன் இந்த விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. இந்த படத்திற்காக அவருக்கு 4 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் இச்செய்தி தற்போது பரவி வருகிறது.

Leave a Comment